மனைவியை சந்தேகப்பட்டு கொலை செய்தவறுக்கு 10 ஆண்டுகள் சிறை.
புதுச்சேரியில் மனைவி நடத்தை மீது சந்தேகம் அடைந்து, கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொலை செய்த கணவனுக்கு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
புதுச்சேரி முத்திரையர்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது55). பால் வியாபாரி. இவரது மனைவி ரதிகலா (வயது 45) தனியார் கம்பெனி ஊழியர்.ரதிகலா அனைவரிடமும் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் பாபு, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கடந்த 26,5,2021 அன்று பாபு
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொலை செய்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொலை செய்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படடது பாபுவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி சந்திரசேகரன் தீர்ப்பளித்தார், மேலும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படடது. அபராதம் கட்ட தவறினால் மேலும், 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜரானார்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments